மூன்று குரங்குகள் பொம்மைக் கதை தெரிந்ததுதான்.
அது போலக் கெட்டதைப் பார்க்காமல் கேட்காமல் நினைக்காமல் இப்போது நம் தொலைக் காட்சிகளோ ,நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளோ விடுவதில்லை.
பூனை கண்ணை மூடிக் கொண்டது போல நம்மால் முடியுமா.
ஆனால் கண்டிப்பாக இந்த மான்,மயில், அதன் குட்டிகள் எல்லாம் கண்ட கண்ட விபரீத அர்த்தம் கொண்ட பாடலுக்கு அபிநயம் பிடிப்பதையும்,
அதி நீதிபதி ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டு விமரிசப்பதையும் பார்க்காமல் இருக்கலாம்.
இதையும் மீறி வலைக்கே வந்துவிடுகிறது அருவருக்கத்தக்கச் சில காட்சிகள்.
இன்று பார்த்த பதிவொன்று. அதில் ஒரு நட்சத்திரம் அம்ர்ந்திருக்க அவர் மடியில் இன்னோரு நடிகை.
இதெல்லாம் நல்ல ரசனையில் எழுதப்படும் பதிவுகளா.
இல்லை அவரவர்கள் தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்ததை இன்னும் ஓர் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிக்கட்டுமே என்று போடப் பட்டதா.
என்னவாக இருந்தாலும் தேவையில்லை இது போலப் படங்களும்,பதிவுகளும்.
அதோட இல்லே; நாம்ப ஏதாவது பொது இடத்துலே - வேலை செய்யற இடத்துலே அல்லது எங்கேயாவது சாதிச்சோம்’னா பெண் என்பதாலே ஆண்கள் "விட்டுக்கொடுப்பதால்" (!!!??) சாதிக்க முடிகிறது என்று சப்பைக்கட்டு கட்டுகிற ஆண்கள் கூட்டமும் இருக்கு. எப்பய்யா இவங்களுக்கு புத்தி வரும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment