வயிறு நிறைந்தால் வேட்டை இல்லை
இந்திய அரசியல் சின்னத்தில்
வெறுமனே பார்த்த படி
தூணில் தலை பதித்திருக்கும்
சிங்கங்கள்
தேசியப் பறவையாக நடமிடும் மயில்கள்
பாரதக் கொடியில் ராட்டைச் சக்கரம்
எல்லாமே
அவர்களது உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு மீண்டும்
அவரவர் இடங்களுக்குப் போவதாகச் சேதி
இனி ஒரு புது விதி என்று இன்று அரங்கேற்றி விட்டார்கள்
இன்னுமொரு நாடகத்தை
நம் மக்கள் தொகை எத்தனையோ கோடி
உயிரோடு இருக்கப் போவதோ
தலைநகரில்
பாராளுமன்றத்தில்
59ஓ 79ஓ தான்.
No comments:
Post a Comment